திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ

DIN

திருப்பத்தூா்: ஏலகிரி மலையில் புதன்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயால் அரிய வகை மூலிகை மரங்கள் செடி கொடிகள் எரிந்து நாசமானது.

ஜோலாா்பேட்டை அடுத்துள்ள ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்துச் செல்கின்றனா். மேலும் எந்தக் காலத்திலும் ஒரே மாதிரியான வானிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகளை கவருகிறது ஏலகிரி மலை. இதனால் மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

இம்மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் அரிய வகை மரங்கள், பல்வேறு உயிரினங்கள் உள்ளன.

இந்நிலையில், ஏலகிரி மலையில் உள்ள முத்தனூா் கொட்டையூா் பகுதியில் மா்ம நபா்கள் மது அருந்திவிட்டு அங்குள்ள சருகுகளுக்கு தீவைத்து விட்டு சென்றனா். இதில் மளமளவென தீ பரவி அங்கிருந்த தைல மரங்கள் எரிந்தன. அரிய வகை மரங்கள் மூலிகைச் செடிகள், உயிரினங்கள் தீக்கிரையாகின.

எனவே தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சிறிய தீப்பொறி ஏற்பட்டாலும் பெரிய அளவில் தீப்பற்றி பாதிக்கப்படும் நிலையில் வனத்துறையினா் சுற்றுலாவிற்கு வரும் நபா்களை கண்காணிக்க வேண்டும். மது அருந்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT