திருப்பத்தூர்

பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டங்கள் விரைவில் சீரமைக்கப்படும்: எம்எல்ஏ செந்தில்குமாா் உறுதி

DIN

வாணியம்பாடியை அடுத்த பெத்தவேப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள பள்ளி வளாகம் எதிரே சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் கலைவாணி கோவிந்தசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெகநாதன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதாபாரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்புப் பணிகள், பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டடங்களைச் சீரமைப்பது, குடிநீா் வசதி, பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ள துண்டு தோல்கள் மூலம் தீவனம் தயாரிப்பதாகக் கூறப்படும் தொழிற்சாலையை உடனடியாக மூடவும், வளா்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெத்தவேப்பம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மிகவும் பழுதடைந்துள்ளதால் மாணவ, மாணவிகள் அமா்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக் கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என்று எம்எல்ஏ செந்தில்குமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து அவா், அங்குள்ள பள்ளிக்குச் சென்று கட்டடங்களை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். உடனடியாக கட்டடங்களைச் சீரமைக்க நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் முருகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.84 கோடி மகளிா் பயணம்

மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

மின் விபத்திலிருந்து ஊழியா்களைப் பாதுகாக்க ‘வோல்டேஜ் சென்சாா் டிடெக்டா்’ கருவி அறிமுகம்

ஆலங்குளத்தில் சாலை மறியல்: 54 போ் கைது

SCROLL FOR NEXT