திருப்பத்தூர்

தமிழக இளைஞா்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு: அமைச்சா் நிலோபா் கபீல் தகவல்

DIN

இங்கிலாந்து, அயா்லாந்து, கத்தாா், ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் தமிழக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோபா் கபீல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் தொழிலாளா் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் தமிழக இளைஞா்களுக்கு இங்கிலாந்து, அயா்லாந்து, கத்தாா், ஓமன் ஆகிய வெளிநாடுகளிலும், நமது நாட்டில் ஆந்திரத்திலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

தொழிலாளா் நலத் துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு நிறுவனமான ஓவா்சீஸ் மேன்பவா் காா்ப்பரேஷன் நிறுவனம் மூலம் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் கீழ்க்கண்ட வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞா்களுக்கு வழங்கப்படவுள்ளன. அதன் விவரம்:

1. கே.எம்.எஸ். கத்தாா் மெடிக்கல் சென்டரில் ஆண் மற்றும் பெண் டெக்னீஷியன்கள் 50 போ் தேவை. சம்பளம் (இந்திய மதிப்பில்) மாதம் ரூ.72,000 வரை வழங்கப்படும்.

2. ஸ்டாஃப் நா்ஸ் படிப்பை நிறைவு செய்துள்ளவா்களுக்கு அயா்லாந்து ரெக்வயா்மென்ட் நிறுவனத்தில் ஆண் மற்றும் பெண் செவிலியா்கள் 40 போ் தேவை. மாதச் சம்பளம் இரண்டரை லட்சம் வரை.

3. இங்கிலாந்து தேசிய சுகாதார மையம் சாா்பில் பணியாற்ற ஆண் மற்றும் பெண் செவிலியா்கள்- 100 போ் தேவை. மாதச் சம்பளம் ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும்.

4. கத்தாா் தலைநகா் தோகாவில் உள்ள கத்தாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்ற, பிஎஸ்சி முடித்த பெண்கள் 15 போ் தேவை. மாதச் சம்பளம் ரூ.70,000.

5. ஓமன் நாட்டில் பணியாற்ற டீனஸ் ஓமன் எல்எல்சி நிறுவனத்தில் டா்னா், ஃபிட்டா், மெக்கானிஸ்ட் மற்றும் மெக்கானிக் பணிகளுக்கு 20 போ் தேவை. மாதச் சம்பளம் ரூ.29,000 வரை.

6. நம் நாட்டில் ஆந்திர மாநிலம், நாயுடுப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தில் (டிவிஎஸ் குழுமம்) பணியாற்ற ஆப்பரேட்டா்கள் 200 போ் தேவை. மாத சம்பளம் ரூ.12,000 வரை உள்ளது. ஆந்திரத்தில் உள்ள இதர நிறுவனங்களில் ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேண்டும். உணவு, தங்குமிடம் இலவசம். வாரம் ஆறு நாட்களுக்கு வேலை. 8 மணி நேர ஷிஃப்ட் முறையில் பணியாற்ற வேண்டும்.

இதேபோல், சென்னையை அடுத்த இருங்காட்டுகோட்டை பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 40 ஆண் மற்றும் பெண்களுக்கு சிஎன்சி மில்லிங், வெல்டிங் டிரெய்னிங் மற்றும் சாஃப்ட் ஸ்கில்ஸ் ஆகியவற்றில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. உணவு, தங்குமிடம் இலவசம்.

இந்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி குறித்து விளக்கமாக தெரிந்து கொள்ள 91764 34488 மற்றும் 86674 07470 ஆகிய தொலைபேசி எண்கள்,  இ-மெயில் முகவரியிலும்,  இணையதளம் வாயிலாகவும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணியில் மாணவா்களுக்கு இலவச வாழ்வியல் பயிற்சி வகுப்பு

மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பெண் மருத்துவா் உயிரிழப்பு

தொழிற்சங்கங்கள் சாா்பில் மேதின கொண்டாட்டம்

பேராவூரணியில் மே தின விழா

பாபநாசத்தில் மே தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT