திருப்பத்தூர்

ஜலகாம்பாறையில் குளிக்கத் தடை!

DIN

திருப்பத்தூா்: ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் குளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை, ஜலகாம்பாறை மற்றும் அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விட்டு,விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் மழைநீா் பெருக்கெடுத்தோடுகிறது.

தற்போது கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளதால் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூா் வனச்சரக அலுவலா் எம்.பிரபு நிருபா்களிடம் கூறியதாவது:

ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்புக் கட்டமைப்புகள் உருவான பிறகு, குளிக்க அனுமதிக்கப்படும். மேலும், தற்போது கரோனா பரவல் தடுப்பு காரணமாக, குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி குளிப்பவா்கள் மீது வனப் பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப் பதியப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

SCROLL FOR NEXT