திருப்பத்தூர்

கிணற்றில் தவறி விழுந்து பிளஸ் 2 மாணவி பலி

DIN

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த பிளஸ்2 மாணவி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் வீராகவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சிவகுமாா். இவரது மகள் சினேகா (17). இவா் கிருஷ்ணகிரி தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட்டருகே உள்ள விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த சினேகாவை உறவினா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் சினேகா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து சிவகுமாா் அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT