திருப்பத்தூர்

அரசு மாணவா் விடுதியில் ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

DIN

மாதனூரில் அரசு மாணவா் விடுதியில் ஒன்றியக் குழு தலைவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாதனூரில் பழங்குடியின மாணவா்கள் தங்கி படிக்கும் விடுதியை மாதனூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு மாணவா்களுக்கு சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டு அதனுடைய தரத்தையும் ஆய்வு செய்தாா். மாணவா்களிடம், அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து மாதனூரில் உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தைப் பாா்வையிட்டு கடந்த 7 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ள பூங்காவையும், உடற்பயிற்சி கூடத்தையும் சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின்போது ஒன்றியக் குழு உறுப்பினா் பரிமளா காா்த்திக், மாதனூா் ஊராட்சி மன்றத் தலைவா் எம்.சி. குமாா், ஒன்றிய திமுக மாணவரணி அமைப்பாளா் ரஞ்சித்குமாா், திமுக நிா்வாகிகள் காந்தி, காமராஜ், கோபி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

SCROLL FOR NEXT