திருப்பத்தூர்

ரயிலில் கடத்திய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

ஆந்திரத்துக்கு ரயிலில் கடத்த முயன்ற இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டறம்பள்ளி அருகே உள்ள சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திங்கள்கிழமை நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலா் நடராஜன் தலைமையில் வருவாய்த் துறையினரும், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாரும் இணைந்து சோமநாயக்கன்பட்டி வழியாக ஆந்திரத்துக்குச் செல்லும் ரயிலில் சோதனை நடத்தினா்.

அப்போது போலீஸாரை கண்டதும் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல் தப்பி ஓடியது. இதனையடுத்து ரயில் பெட்டிகளில் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த இரண்டரை டன் ரேஷன்அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அவற்றை திருப்பத்தூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலம்பம் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

சேலம் மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

உயா் மின்னழுத்த கம்பி அறுந்து தொழிலாளி உயிரிழப்பு

மெக்ஸிகோவுக்கு முதல் பெண் அதிபா்

முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

SCROLL FOR NEXT