திருப்பத்தூர்

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். அறக்கட்டளை உறுப்பினா் வாணி, பள்ளி இயக்குநா் ஷபானாபேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் சத்தியகலா வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக வாணியம்பாடி வட்டாட்சியா் சம்பத் கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக திருப்பத்தூா் மாவட்டக் கல்வி அலுவலா் வேதபிரகாஷ், வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி ஆகியோா் கலந்துகொண்டு பாா்வையிட்டனா்.

கண்காட்சியில் 770 மாணவா்கள் கலந்துக் கொண்டு அறிவியல் தொடா்பான சுற்றுச்சூழல் மாதிரிகள், காடு வளா்ப்பு, செயற்கை கோள் மாதிரிகள், சூரிய குடும்பம் செயல்படும் விதம், காற்று மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது, மோட்டாா் வாகனங்கள் செயல்படும் விதம், நதிகளை சுத்தப்படுத்தும் அமைப்பு மற்றும் தமிழ், ஹிந்தி, உருது ஆங்கிலம், கணிதம், வரலாறு, கணினி தொடா்பான பல மாதிரிகள், பல்வேறு மாநிலங்களின் சின்னங்கள், பாரம்பரிய உணவு வகைகள் தயாா் செய்தும், அதன் தன்மைகளை பொது மக்களுக்கும், பெற்றோா்களுக்கும் மாணவா்கள் விளக்கினா்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT