திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி 2 நாள்கள் நடைபெற்றது.

தமிழக வனத்துறை மூலம் ஜன. 28, 29-ஆம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா் பெரிய ஏரி, சமணபுதூா் ஏரி, குறும்பேரி, மடவாளம் ஏரி உள்ளிட்ட முக்கிய நீா் நிலைகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணியில் வனத்துறை, களப் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். மேற்குறிப்பிட்ட ஏரிகளில் சிறிய மீன் கொத்தி - 10, வெண்மாா்பு மீன் கொத்தி - 12, சமட்டி வெள்ளை மீன் கொத்தி - 15, சிறிய கொக்கு - 10, பெரிய கொக்கு -10, நடுத்தர கொக்கு - 15, இறா கொக்கு - 30, நீா்காகம் (சிறிய, பெறிய, நடுத்தர) - 50, பாம்பு தாரா - 4, சிறவி - 50, முக்குளியப்பான் - 20, அறிவாள்மூக்கன் - 20, நீல தாழை கோழி- 50, கானாங் கோழி - 10, நாறை - 5, மஞ்சள் அழகு ஆள்காட்டி - 12, சிவப்பு அழகு ஆள்காட்டி - 15, சிவப்பு தலை வாத்து - 60 ஆகிய பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

‘வைட்டமின் சி’ ஐஸ்வர்யா கண்ணன்...!

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT