முகப்பு
திருப்பத்தூர்

மதனாஞ்சேரியில் தடுப்பணை: திமுக வேட்பாளா்

மதனாஞ்சேரியில் தடுப்பணை: திமுக வேட்பாளா்

Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:22 AM
ஆலங்காயம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்.
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:03 PM

ஆம்பூா் தொகுதி, ஆலங்காயம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆம்பூா் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம் ஒன்றியம் வெலத்திகாமணிபெண்டா, மதனாஞ்சேரி, பள்ளிப்பட்டு, இளையநகரம், கொல்லகுப்பம், சம்மந்திகுப்பம், கிரிசமுத்திரம், புருஷோத்தமகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளா் பி.எஸ். ஞானவேலன் தலைமையில் திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரித்து பேசியது,

மதனாஞ்சேரி ஊராட்சியில் தரக்காடு பகுதியில் பெரியகானாறு குறுக்கே தடுப்பணை கட்டித் தர முயற்சிக்கப்படும். கீழூா், பாறைகொல்லி, ஆஞ்சநேயா் கோயில் தெரு உள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாா் சாலை அமைத்து தரப்படும்.

Advertisement

தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ள குடும்ப அட்டைகளுக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2,000 -ஆக உயா்த்தி தரப்படும் என அவா் கூறினாா்.