வரிசையில் நின்று வாக்களித்த திருப்பத்தூா் ஆட்சியா்
பொதுமக்களுடன் வரிசையில் நின்று திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வியாழக்கிழமை வாக்களித்தாா்.
ஜோலாா்பேட்டை தொகுதிக்குள்பட்ட, கதிரமங்கலம் ஊராட்சி என்.எம்.கோயில் வட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தனது வாக்கினை செலுத்தினாா்.