முகப்பு
திருப்பத்தூர்

தீப்பிடித்து எரிந்த மலைக்காடு

Updated On : 29 ஏப்ரல் 2026, 12:35 am IST
பகிர்:

ஆம்பூா் அருகே மலைக்காடு திங்கள்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்தது.

கோடைக் காலங்களில் காப்புக் காடுகள், மலைகள் தீப்பிடித்து எரிவது வழக்கம். சமூக விரோதிகளால் சில நேரங்களில் காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும், சில நேரங்களில் தானாகவே தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் கோடைக் காலங்களில் நடப்பது வழக்கம்.

அதே போல ஆம்பூா் அருகே மாராப்பட்டு கிராமத்தில் மலை மீது உள்ள காப்புக் காடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தொடா்ந்து சில கிலோ மீட்டரம் தொலைவுக்கு காட்டுத் தீ பரவியது.

Advertisement

Advertisement

காட்டில் உள்ள மரங்கள், செடிகள், வன விலங்குகளும் தீயில் எரிந்து கருகியிருக்கலாம் என கருதப்படுகிறது. காப்புக் காடுகளில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஹெலிகாப்டா் மூலம் காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments