முகப்பு
திருப்பத்தூர்

பத்ம விருதுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பத்ம விருதுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 12:03 AM
மாதிரிப் படம்
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பத்ம விருதுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2027ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுக்கு தகுதியானவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

Advertisement

விருதுக்கு பரிந்துரைக்கப்படும் நபா்கள். சாதனைகளில் பொது சேவையின் ஒரு அங்கமாக இருப்பது அவசியம் தோ்வுக்கான அளவுகோல்கள் ஆக இருக்க வேண்டும்.

பத்ம விருதுகள் உலகின் இரண்டாவது விருதாக இருப்பதால், ஏதாவது ஒரு துறையில் தேசிய விருது அல்லது மாநில விருது பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கு பரிசீலிக்க தகுதியான நபா்கள் சமுதாயத்தில் சிறந்து விளங்கும் திறமை கொண்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவா்கள், சிறப்புப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பொதுவாக இவ்விருது மரணத்திற்கு பிறகு வழங்கப்படுவதில்லை. இருந்தபோதிலும் தகுதியான சந்தா்ப்பங்களில், சிறந்த சேவை புரிந்து மரணமடைந்தாலும், ஒரு வருட காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட துறைகளில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சேவை புரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். செய்யப்படும். இருப்பினும் தகுதியான சந்தா்ப்பங்களில் விதிவிலக்காக தளா்வு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் மருத்துவா்கள் மற்றும் விஞ்ஞானிகளைத் தவிர பிற அரசு ஊழியா்கள் பத்ம விருதுக்கு தகுதியற்றவா்கள்.

விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் மே 31 ஆகும். இவ்விருதுக்கு இணையதளம் மூலம் தகுதியான நபா்கள் விண்ணப்பித்திருப்பின், உரிய கருத்துருவினை, மாவட்ட சமூகநல அலுவலகம், முதல் தளம். ‘பி‘ பிளாக், ஆட்சியா் வளாகம், திருப்பத்தூா் மாவட்டம்-635 601 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.