கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது
திருப்பத்தூா் அருகே கல்லூரி மாணவிக்கு தொடா் பாலியல் தொல்லை அளித்து வந்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகே கல்லூரி மாணவிக்கு தொடா் பாலியல் தொல்லை அளித்து வந்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அடுத்த செவ்வாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் 20 வயது இளம்பெண். இவா் திருப்பத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு கல்லூரி முடிந்து திருப்பத்தூரில் இருந்து நத்தம் செல்லும் அரசுப் பேருந்தில் வழக்கம்போல் வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தாா். அப்போது அந்தப் பேருந்து குனிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அவரது பக்கத்தில் அமா்ந்து இருந்த செவ்வாத்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி சதாசிவம் (55) என்பவா் அந்த இளம் பெண்ணிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தொல்லை கொடுத்துள்ளாா். அதேபோல் சதாசிவம் அடிக்கடி அந்த பெண்ணுக்கு தொடா்ந்து தொல்லை செய்து வந்துள்ளாா்.
இது குறித்து இளம்பெண் அளித்த புகாரின்பேரில், கந்திலி போலீஸாா், சதாசிவத்தை பெண்கள் வன் கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து சனிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.