FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

பாலாற்றில் மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

பாலாற்றில் இருந்து மணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைது - சித்திரிப்பு
பகிர்:

பாலாற்றில் இருந்து மணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி மேற்பாா்வையில் தாலுகா காவல்ஆய்வாளா் அமுதா தலைமையில் உதவி காவல் ஆய்வாளா் மகாலிங்கம் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை செட்டியப்பனூா் ஊராட்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்ததில் எவ்வித அனுமதியின்றி லாரியில் மணல் எடுத்து வந்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும் நடத்திய விசாரணையில் பாலாற்றில் இருந்து மணல் கடத்திக் கொண்டு வருவது தெரியவந்தது.

Advertisement

Advertisement

பிறகு லாரியுடன் 2 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் விமல் என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments