FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு

நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை போலீஸாா் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனா்.

தலைமறைவு
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை போலீஸாா் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனா்.

நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி தலைமையில் உதவி காவல்ஆய்வாளா் ரஞ்சித் மற்றும் போலீஸாா் நாட்டறம்பள்ளி பங்களாமேடு அருகே அணுகு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசாா் நிறுத்தி முயன்றனா். ஆனால் ஓட்டுநா் லாரியை சிறிது தூரம் ஓட்டிச் சென்று சாலை ஓரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினாா். இதையடுத்து லாரியை போலீஸாா் சோதனை செய்ததில் அனுமதி இல்லாமல் வெலகல்நத்தம் செட்டேரி அணை அருகில் இருந்து லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து போலீஸாா் 4 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநா் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments