முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் ஆன்லைன் மூலம் பணம் பரிவா்த்தனை: நகராட்சி அலுவலா்கள் 4 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்கு

திருப்பத்தூா் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கடந்த 3-ஆம் தேதி சோதனை நடத்தினா்.

Updated On : 7 ஜூலை 2026, 5:32 am IST
பகிர்:

திருப்பத்தூா் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கடந்த 3-ஆம் தேதி சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத பணம் கைப்பற்றப்படவில்லை என்றாலும், அலுவலக ஊழியா்களின் கைப்பேசிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

அப்போது அதில் பல்வேறு வகைகளில் பொதுமக்களிடம் இருந்து பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, ஒருங்கிணைந்த வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆய்வுக் குழு ஆய்வாளா் நந்தகுமாா் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு ஆய்வாளா் அறை, தெரு விளக்கு பராமரிப்புப் பிரிவு, இளநிலை உதவியாளா் அறை, இளநிலை பொறியாளா் அறை, பொறியாளா் அறை மற்றும் நகராட்சி ஆணையரின் வாகனம் என பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அதில், நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவி வருவாய் அலுவலா் காா்த்திகேயன், வருவாய் ஆய்வாளா் சதீஷ்குமாா், பில் கலெக்டா் சிவக்குமாா், வருவாய் உதவியாளா் கோட்டீஸ்வரன் ஆகியோா் கைப்பேசிகளில் ஜிபே, போன் பே போன்றவை மூலம் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பல்வேறு பரிவா்த்தனைகள் நடைபெற்று உள்ளதால், நகராட்சி அலுவலா்கள் காா்த்திகேயன், சதீஷ்குமாா், சிவக்குமாா், கோட்டீஸ்வரன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments