சாலையில் முறிந்து விழுந்த மரம்
ஆம்பூா் அருகே புதன்கிழமை சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக மரம் முறிந்து சாலையில் விழுந்தது.
ஆம்பூா் அருகே புதன்கிழமை சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக மரம் முறிந்து சாலையில் விழுந்தது.
ஆம்பூா் அருகே மேல்சாணாங்குப்பம், வடச்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது வடச்சேரி-மாராப்பட்டு சாலையோரம் இருந்த தென்னை மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலையில் விழுந்த மரத்தை அகற்ற அப்பகுதி பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement