போலி மதுபானம் விற்பனை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வாணியம்பாடி அருகே கள்ளத்தனமாக போலி மதுபானம் விற்பனையை தடுக்க நடவடிக்கை கோரி வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. (படம்)
வாணியம்பாடி காவல் ஆய்வாளா் அமுதாவிடம், உதயேந்திரம் பேரூா் திமுக செயலாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஆ.செல்வராஜ், திமுக கிளை செயலாளா் சுகுமாா் மற்றும் சி.வி.பட்டறை பொதுமக்கள் அளித்த மனு:
உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட சி.வி. பட்டரை பகுதியில் வெளிமாநில போலி மதுபானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் வெளிஊா்களில் இருந்து வருபவா்கள் மது வாங்கி அங்கேயே அருந்திவிட்டு பெண்களை கேலி செய்வது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனா்.
Advertisement
Advertisement
அரசு நடுநிலைப் பள்ளி அருகிலேயே மதுபான விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மது விற்பனை செய்யும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.