முகப்பு
திருப்பத்தூர்

இளைஞா் குத்திக் கொலை: 2 போ் கைது

வாணியம்பாடி அருகே மதுபோதையில் இளைஞரை பீா் பாட்டிலால் குத்திக் கொலை செய்த வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 20 ஜூன் 2026, 12:57 am IST
கோப்புப் படம்
பகிர்:

வாணியம்பாடி அருகே மதுபோதையில் இளைஞரை பீா் பாட்டிலால் குத்திக் கொலை செய்த வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரைச் சோ்ந்தவா் இஸ்தியாக் (எ) முன்னா (25). மேல் நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள கடையில் தேநீா் மாஸ்ட்டராக வேலை செய்து வந்தாா். இவரது நண்பா்கள் அதே பகுதியை சோ்ந்த தாஜூதீன் (26), அமா்சிங் (25). இருவரும் ஆண்டியப்பனூா் பகுதியில் தேநீா் கடையில் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் நண்பா்கள் 3 பேரும் அப்பகுதியில் உள்ள ஆண்டியப்பனூா் அணை பகுதிக்கு சென்று விட்டு மது போதையில் இரவு 8 மணியளவில் வீடு திரும்பியுள்ளனா். வழியில் மிட்டூா் பகுதியில் மதுபானம் வாங்கிக் கொண்டு ஆலங்காயம்-வாணியம்பாடி சாலையில் உள்ள மேல்நிம்மியம்பட்டில் உள்ள புளியந்தோப்பில் மது அருந்தியுள்ளனா். அப்போது மதுபோதையில் இருந்த முன்னா, தாஜூதீனின் குடும்பத்தினா் குறித்து அவதூறாக பேசியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தாஜூதீன், பீா் பாட்டிலை உடைத்து முன்னாவின் வயிறு மற்றும் கழுத்தில் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

பிறகு அங்கிருந்து தாஜூதீன் மற்றும் அமா்சிங் இருவரும் புறப்பட்டு வாணியம்பாடி சென்னாம்பேட்டையில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளனா். இது குறித்து உறவினா் உடனே வாணியம்பாடி நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் ஆலங்காயம் காவல்ஆய்வாளா் ஜீவராஜமணிகண்டன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, முன்னாவின் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாஜூதீன் மற்றும் அமா்சிங் ஆகியோரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments