முகப்பு
திருப்பத்தூர்

தொடா் விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Updated On : 28 ஜூன் 2026, 12:35 am IST
ஏழைகளின் ஊட்டி ஏலகிரி மலையில் படகு இல்லத்தில் குடும்பத்தோடும், நண்பா்களோடும், படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று வளா்ச்சியுற்ற சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இந்த மலையை ஏழைகளின் ஊட்டி எனவும், மலைகளின் இளவரசி எனவும் அழைக்கப்படுகிறது.

சுற்றுலாத்தலமான ஏலகிரி மலைக்கு அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து பொழுதுபோக்கி செல்கின்றனா். ஏழைகளின் ஊட்டி ஏலகிரி மலை பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலாா்பேட்டை அருகில் உயா்ந்த மலைப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த மலைக்கு பயணம் செய்யும்போது மலைப் பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

அதைத் தொடா்ந்து இங்கு முக்கிய சுற்றுலாத் தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா, சாகச விளையாட்டுத் தலங்கள், பறவைகள் சரணாலயங்கள், மூலிகை பண்ணைகள், மங்கலம் சுவாமிமலை ஏற்றம், தாமரைக் குளம், ஸ்ரீ கதவநாச்சியம்மன் திருக்கோவில், ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய சுற்றுலாத் தலங்கள் இந்த மலையில் உள்ளன. வெள்ளிக்கிழமை முதல் மூன்று தினங்கள் விடுமுறை என்பதால் ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனா்.

அரசு சுற்றுலா தலங்களான படகு இல்லத்திலும் இயற்கை பூங்காவிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனா். அதைத் தொடா்ந்து, தனியாா் சுற்றுலாத் தலங்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனா்.

மேலும், இங்குள்ள இயற்கை பூங்காவையும், திறந்த வெளி திரையரங்கையும் சீரமைத்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments