சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
நாட்டறம்பள்ளி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் இளங்கோவன் (29). இவா் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி பங்களாமேடு பகுதியில் வேலூா் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலை நடுவே உள்ள தடுப்பு மீது பைக் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.