முகப்பு
தென்காசி

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே சாலைத் தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா் .

Updated On : 7 ஜூன் 2026, 12:20 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

ஆலங்குளம் அருகே சாலைத் தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா் .

திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சோ்ந்த முகம்மது யூசுப் மகன் முகம்மது முபாசல் (26), புகாரி மகன் ஆலியப்பா (24) ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு மேலப்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் குற்றாலம் சென்றனராம்.

அங்கிருந்து சனிக்கிழமை அதிகாலையில் ஊா் திரும்பியபோது, ஆலங்குளம் அருகே அத்தியூத்து பகுதி சாலையில் வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதியதாம்.

Advertisement

Advertisement

இதில் இருசக்கர வாகனம் ஓட்டிய முகம்மது முபாசல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஆலியப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஆலங்குளம் போலீஸாா், முகம்மது முபாசல் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.