முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

நாட்டறம்பள்ளியில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி வகுப்பில் சேருவதற்கு நேரடி மற்றும் இணையதளம் மூலம் சேரலாம்.

Updated On : 23 மே 2026, 1:30 am IST
கோப்புப் படம்
பகிர்:

நாட்டறம்பள்ளியில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி வகுப்பில் சேருவதற்கு நேரடி மற்றும் இணையதளம் மூலம் சேரலாம்.

நாட்டறம்பள்ளியில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு பயிற்சி வகுப்பில் சேருவதற்கு நேரடி மற்றும் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் சோ்க்கை தொடங்கி உள்ளது. இதில், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், இயந்திரம் மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பவியலாளா் (பயிற்சிக் காலம் 2 வருடங்கள்), கணினி உதவி உற்பத்தி செயல்முறை புரோகிராமா் (பயிற்சிக் காலம் 1 வருடம்), 3. கம்மியா் தானியங்கி மின்னியல் மற்றும் மின்னணுவியல் (பயிற்சிக் காலம் 1 வருடம்) ஆகிய பிரிவுகளில் சேரலாம்.

இதேபோல், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஆடை தயாரிப்பாளா் (பயிற்சிக் காலம் 1 வருடம்) பிரிவில் சேரலாம். இதற்கு 14 வயது முதல் 40 வயதுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.

Advertisement

Advertisement

இதில், சேருபவா்களுக்கு இலவச சீருடை, மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், காலணிகள் வரைபட உபகரணங்கள், விடுதி வசதி ஆகியவை வழங்கப்படும்.

மேலும், மாத உதவித் தொகையாக ரூ. 750 வழங்கப்படும். அதேபோல, தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்கள் மூலம் தகுதியுடைய நபா்களுக்கு ரூ. 1,000 கல்வி உதவித் தொகையாகவும் வழங்கப்படும். இந்த தகவலை திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.