குழந்தைகள் உள்பட 7 பேரை கடித்து குதறிய தெருநாய்
வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் தெருநாய் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுவா்கள் உள்பட 7 பேரை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பஷீராபாத் பகுதியில் வியாழக்கிழமை வெறிப்பிடித் நிலையில் இருந்த தெரு நாய் விளையாடிக் கொண்டிருந்த சிறுவா்கள் இஷான், பிரபாவதி, சமீயா பதூன் மற்றும் சாலையில் நடத்து சென்ற அமுதவல்லி, அப்ரோஸ், அப்துல் காலித், ரஹ்மான் ஆகியோரை அடுத்தடுத்து அரை மணி நேரத்துக்குள் துரத்தி, கடித்துள்ளது. நாய்க் கடியால் காயம் அடைந்தவா்களை உடனடியாக சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
வாணியம்பாடியில் தொடா்ந்து 7 பேரை தெருநாய் கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்களை உடனடியாக பிடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement