திருவள்ளூர்

திருத்தணியில் பலத்த காற்றுடன் மழை

DIN

திருத்தணியில் பலத்த காற்று, மின்னலுடன் வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்தது. அப்போது, மின் கம்பங்கள் விழுந்ததால், நகரில் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
திருத்தணியில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 114 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை பகலில் அனல் காற்றுடன் 113 டிகிரி வெயில் பதிவானது. இந்நிலையில், மாலை 5 மணிக்கு திடீரென பலத்த காற்று வீசியது. இதில், குடிசைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. திருத்தணி புறாகோயில் தெருவில் 2 மின் கம்பங்களும், ஒரு மரமும் சாய்ந்து விழுந்தன. இதனால், 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
இதையடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். பின்னர் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு, மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், மாலை 6.45 மணி அளவில் மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் நகர மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT