திருவள்ளூர்

வீடு வீடாகச் சென்று போலியோ குறித்து ஆய்வு

DIN

கும்மிடிப்பூண்டியில் போலியோ சொட்டு மருந்து செலுத்தாமல் விடுபட்டுள்ள குழந்தைகள் உள்ளனரா என்பது குறித்து உலக சுகாதாரநிறுவன வெளிப் பிரிவு கண்காணிப்பாளர் மோகனசுந்தரம் ஆய்வு நடத்தினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்டமாக 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. இதில், 19 ஆயிரத்து 342 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தரப்பட்ட நிலையில், விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் வெளிப் பிரிவு கண்காணிப்பாளர் மருத்துவர் மோகனசுந்தரம் கும்மிடிப்பூண்டியை அடுத்த காயலார்மேடு மற்றும் இலங்கை அகதிகள் முகாமில் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தினார். வட்டார சுகாதார மருத்துவர் ராஜேஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதார ஆய்வாளர் முரளிதரன், சமுதாய சுகாதார செவிலியர் மரிய சந்தனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி வட்டத்தில் வரையறுக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உரிய முறையில் போலியோ சொட்டு மருந்து முறையாக வழங்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வின் போது, உலக சுகாதார நிறுவன வெளிப் பிரிவு கண்காணிப்பாளர் மோகனசுந்தரம் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT