திருவள்ளூர்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தொடக்கம்

DIN


கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான நவீன லேப்ராஸ்கோப்பி கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் , குடும்ப நலத் துணை இயக்குநர் இளங்கோவன் ஆகியோரின் ஆலோசனையின்படி, கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன் முறையாக பெண்களுக்கான நவீன லேப்ராஸ்கோப்பி கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
நிகழ்வில், மருத்துவர்கள் சூர்யபிரபாவதி, சுந்தரி கோவலன், சஞ்சீவிதா, வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் இந்த அறுவை சிகிச்சை முகாமை நடத்தினார்கள்.
முகாமில், லேப்ராஸ்கோப்பி முறையில் 25 பெண்களுக்கு நவீன கருத்தடை அறுவை சிகிச்சையும், 3 பேருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சையும் நடத்தப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அனைத்து தாய்மார்களும் நலமுடன் இருப்பதோடு, இந்த நவீன அறுவை சிகிச்சை மூலம் ஓரிரு மணி நேரங்களிலேயே பெண்கள் இயல்பு நிலைக்கு வந்துள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்த வலியையும் மிகக் குறைந்த அளவே அவர்கள் உணர்ந்ததாகவும் வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர் செல்வம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT