திருவள்ளூர்

முன்னாள் படைவீரர்களுக்கு நாளை சுய தொழில் கருத்தரங்கு

DIN

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் சுய தொழில் தொடங்குவதற்கான ஊக்குவிப்பு  கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: முன்னாள் படைவீரர்கள் பயன்பெறும் நோக்கத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செயல்படுத்தி வருகிறது. 
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் வேலைவாய்ப்புக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை (ஆக.16-ஆம் தேதி) நடைபெறவுள்ளது. 
இக்கருத்தரங்கம் ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. சுயதொழில் வேலைவாய்ப்புகளுக்கான ஆலோசனை வழங்கப்பட உள்ளதால் இந்த கருத்தரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT