திருவள்ளூர்

பள்ளியில் சர்வதேச தாய்மொழி தினம்

DIN


சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி, திருவள்ளூர் பாரதிதாசன் மேல்நிலைப் பள்ளி சார்பில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.  
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தாளாளர் மோ.தி.உமாசங்கர் தலைமை வகித்தார். இதில், தாய்மொழி தினத்தின் சிறப்பு குறித்து தமிழாசிரியர்கள் மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, தமிழ்த் துறை சார்பில் கட்டுரை, கவிதை மற்றும் ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 
இப்போட்டிகளில், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பின்னர், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மேரி, தே.குமரீஸ்வரி ஆகியோர் சிறப்பிடம் பெற்றவர்களைப் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT