முகப்பு
திருவள்ளூர்

செங்குன்றத்தில் சாலைப் பாதுகாப்பு  விழிப்புணர்வு முகாம்

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான

Updated On : 23 ஜனவரி 2019, 6:18 am IST
பகிர்:

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையத்தில் உள்ள கோஜான் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.
சாலை விதிகளைப் பின்பற்றுதல், வாகனம் இயக்கும்போது செல்லிடப்பேசியில் பேசுவதைத் தவிர்த்தல், தலைக்கவசம் கட்டாயம் அணிதல், வாகன ஆவணங்களை சரியாக வைத்திருத்தல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து மாணவ, மாணவியர் சாலைப் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது தொடர்பான உறுதிமொழியை ஏற்றனர். இதில்  கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.