முகப்பு
திருவள்ளூர்

துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த திமுகவினர்

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாதவரத்தில் திமுகவினர் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.

Updated On : 23 ஜனவரி 2019, 6:18 am IST
பகிர்:

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாதவரத்தில் திமுகவினர் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.
திமுக இலக்கிய அணி சார்பில், திமுக ஆட்சியில் மக்களுக்கு ஆற்றிய பணிகள், திமுக ஆட்சிக்கு மீண்டும் வர வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலரும், மாதவரம் சட்டப் பேரவை  உறுப்பினருமான வழக்குரைஞர் எஸ்.சுதர்சனம் தலைமையில் மாதவரத்தில் நடைபெற்றது.
கலை இலக்கிய அணியின் மாநிலச் செயலர் புலவர் இந்திரகுமாரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சென்னை வடக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரெயின்போ என்.விஜயகுமார், பகுதி செயலர்கள் துக்காராம், பரசுராமன், பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன், மாவட்ட துணைச் செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.