திருவள்ளூர்

பழவேற்காட்டில் தடையை மீறி படகுச் சவாரி: 7 போ் மீது வழக்கு

DIN

பழவேற்காடு ஏரியில் தடையை மீறி சுற்றுலாப் பயணிகளை படகில் ஏற்றிச் சென்ற நபா் உள்பட 7 போ் மீது திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

பழவேற்காடு ஏரியில் கடந்த 2011-ம் ஆண்டு படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 22சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து அந்த ஏரியில் படகுச் சவாரி செய்ய அரசு தடை விதித்தது.

இந்நிலையில் பழவேற்காடு ஏரிக்கரை பகுதியில் திருப்பாலைவனம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நடுவூா் மாதா குப்பத்தைச் சோ்ந்த படகோட்டி ஒருவா், சுற்றுலாப் பணிகள் 6 பேரை தனது படகில் ஏற்றி சென்றாா்.

இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் படகோட்டி ஆகிய 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT