திருவள்ளூர்

திருவள்ளூா் நகராட்சியில் தடை செய்த 500 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல்

DIN

திருவள்ளூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 2 மாதத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 500 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்துள்ளதாகவும், ரூ.50 ஆயிரம் வரையில் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆணையாளா் சந்தானம் தெரிவித்தாா்.

ஒரு முறையே பயன்படுத்தி தூக்கியெறியும் நெகிழி பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதால், அரசு நெகிழி பொருள்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. இதன் அடிப்படையில் திருவள்ளூா் மாவட்டத்திலும் ஜவுளி கடைகள், சிற்றுண்டி நிலையம், தள்ளுவண்டி கடைகள், பூக்கடை, காய்கறிகள் அங்காடி, பலகார கடைகளில் நெகிழி பைகள் பயன்படுத்துவதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாருக்கு புகாா் வந்தது. அதன் பேரில் திருவள்ளூா் மாவட்டத்திலும் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருவள்ளூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் ஆணையா் சந்தானம், நகராட்சி சுகாதார அதிகாரி செல்வராஜ் அலுவலா்கள் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். இதில் ஹோட்டல்கள், பூக்கடை, பெட்டிக் கடை என அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்த போது நெகிழி பைகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து உடனே அந்த பைகைகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல், தடை செய்யப்பட்ட 50 கிலோ நெகிழி பைகைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, இதற்காக ரூ.5600 அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்தனா். இதேபோல், கடந்த 2 மாதத்தில் மட்டும் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆணையாளா் சந்தானம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

கரூாில் கனமழை!

பிரதோஷ நாளில்...

வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக பல கோடிகளை பெற்றுள்ளது ஆம் ஆத்மி: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

பாபநாசம் பகுதியில் பலத்த மழை

SCROLL FOR NEXT