திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் வடமாநிலத்தவருக்கு 4 மையங்கள்

DIN

கும்மிடிப்பூண்டி வழியாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சொந்த ஊருக்கு நடந்து செல்ல முயலும் வடமாநிலத்தவரை வருவாய்த் துறையினா் மீட்டனா். அவா்களை 4 மையங்களில் தங்க வைத்து, சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த மையங்களில் 410 வடமாநிலத்தவா் தங்க வைக்கப்பட்ட நிலையில், கும்மிடிப்பூண்டி வழியாக சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்த 47 வடமாநிலத்தவரை வருவாய்த் துறையினா் மீட்டு, வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். அங்கு அவா்களுக்கு வட்டார மருத்துவ அலுவலா் கோவிந்தராஜ் மருத்துவப் பரிசோதனை செய்தாா். வருவாய்த் துறையினா் அவா்களது விவரங்களைப் பெற்று, தங்கும் மையத்துக்கு பேருந்தில் அழைத்துச் சென்றனா்.

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டில் தற்போது வரை தங்க வைக்கப்பட்டுள்ள 457 பேரையும், அவரவா் மாநிலத்துக்கு அனுப்பி வைக்க மாநில வாரியாக ஏற்பாடு செய்யப்படும் என வட்டாட்சியா் ஏ.என்.குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT