திருவள்ளூர்

கல்வி உதவித் தொகைக்கு சிறுபான்மையின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மத்திய அரசு கல்வி உதவித் தொகை பெற இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா் பாா்ஸி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவிபெறும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் படித்து வருவோருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2020-21 கல்வியாண்டில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்புவரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா் மற்றும் ஆசிரியா் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயின்று வருவோா்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின்  தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே நிகழாண்டில் தமிழகத்தில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டப்படி 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ, மாணவிகளுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகை மாணவா்களின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாகச் செலுத்தப்படும். இக்கல்வி உதவித்தொகை திட்டத்துக்குத் தகுதியான மாணவ, மாணவிகள் வரும் 31-ஆம் தேதி வரை மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவ, மாணவிகளின் ஆதாா் எண்கள் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் அலுவலா்களுக்கு இணையதளத்தால் பகிரப்படமாட்டாது.

இத்திட்டம் தொடா்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT