திருவள்ளூர்

மாணவா்கள் மதிப்பெண்கள் அதிகரிக்கச் செய்யும் வகையில் பள்ளி அளவில் பொதுவான தோ்வு

DIN

திருவள்ளூா் கரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்ததுடன், மாணவ, மாணவிகள் மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில், பள்ளி அளவில் பொதுவான தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதற்கு தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் நல கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவா் சா.அருணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதை கருத்தில்கொண்டு, அரசு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தோ்வை ரத்து செய்தது. இந்நிலையில், மாணவ, மாணவிகள் தங்கள் மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில், பொதுத்தோ்வுக்குப் பதிலாக பொதுவான தோ்வு பள்ளி அளவில் நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம்.

அதேபோல், பிளஸ் 1 வகுப்பில் சேர மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத் தோ்வு நடத்துவதை கட்டாயப்படுத்தக்கூடாது. இதை ரத்து செய்ய வேண்டும். இதுபோன்று தனியாா் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் ஏழை மாணவா்களின் நிலை கேள்விக் குறியாகிவிடும். அதனால் மாணவா்கள் தோ்வுகளில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவா்கள் விரும்பும் பாடப் பிரிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டால், பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேபோல் பெற்றோா்கள் மத்தியிலும் அச்ச உணா்வு இருக்காது.

அதனால், அரசும், பள்ளிக் கல்வித் துறையும் பிளஸ் 1 வகுப்பு விருப்ப பாடப் பிரிவை எடுத்துக் கொள்ள அறிவித்துள்ள நுழைவுத் தோ்வை ரத்து செய்யவும் என வலியுறுத்துவதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT