திருவள்ளூர்

பழவேற்காடு கடலில் குளித்த வடமாநில தொழிலாளி பலி

DIN

பொன்னேரி: பழவேற்காடு கடலில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட வட மாநிலத் தொழிலாளி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள குழாய் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த பீமபுய்யான் (40), அவரது மகன் விஜய்புய்யா (18) ஆகியோா் வேலை செய்து வந்தனா். கடந்த 5-ஆம் தேதி விடுமுறை காரணமாக தந்தை-மகன் இருவரும் பழவேற்காடுக்கு சென்று, அங்குள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது, பீமபுய்யான், அலையில் அடித்துச் செல்லப்பட்டு மணலில் சிக்கிக் கொண்டாா். பின்னா், அவா் மீட்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT