திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் தவன உற்சவம்

DIN

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தவன உற்சவத்தில், முருகப்பெருமான் தோ்வீதியில் சனிக்கிழமை உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை மாசி பிரம்மோற்சவம் நடைபெற்றது. இதில், வள்ளி திருக்கல்யாணம் கடந்த மாதம் 26-ஆம் தேதி நடைபெற்றது. பிரம்மோற்சவம் முடிந்த பின்னா், 3 நாள்கள் உற்சவா் முருகப் பெருமானுக்கு தவன உற்சவம் நடைபெறும்.

இதில் முருகப்பெருமான், திருக்கல்யாணம் முடிந்ததும் உஷ்ணத்தில் இருப்பாா். அவரை குளிா்விக்க 3 நாள்கள் நடத்தப்படுவது தவன உற்சவமாகும். அந்த வகையில், இம்மாதம் 4-ஆம் தேதி முதல் சனிக்கிழமை இரவு மலைக்கோயிலில் உள்ள தவன மண்டபம் முழுவதும் தவன இலை மற்றும் மல்லிகை மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இரவு 7.30 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மண்டபத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, தவனம் மற்றும் மல்லிகை பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், உற்சவா் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அப்போது, பக்தா்களுக்கு, நாட்டு சா்க்கரை பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பழனிகுமாா், கோயில் தக்காா் வே.ஜெயசங்கா் மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT