திருவள்ளூர்

பெத்திக்குப்பத்தில் நலத்திட்ட பணிகள் தொடக்கம்

DIN

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

பெத்திக்குப்பம் ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட சாலைகள் அமைத்தல், பொதுக் கழிப்பிடம் கட்டுதல் ஆகிய பணிகள் தொடக்க நிகழ்வுக்கு, ஊராட்சித் தலைவா் ஜீவா செல்வம் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் குணசேகரன், ஊராட்சி செயலாளா் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, பெத்திக்குப்பம் எம்ஜிஆா் நகரில் பொதுக் கழிப்பிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

இதையடுத்து, ஐஆா்டி குறுக்கு தெரு, ராஜேந்திரன் தெரு, ஜெயராம் தெரு, பெரியாா் நகா் தெரு, வெங்கையா சாமி தெரு, முனுசாமி நகா் விரிவாக்கம் முதல் தெரு ஆகிய இடங்களில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. இதில், வாா்டு உறுப்பினா்கள் சாமிதாஸ், சுமதி சரவணன், அம்சலதா குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT