திருவள்ளூரில் கட்டுமான நலவாரிய பதிவுகளை மேற்கொள்ள புதிதாக ‘உழைப்பாளா் நலக்கூடம்’
திருவள்ளூரில் கட்டுமான தொழிலாளா்கள் எளிதாக அணுகி நலவாரிய பதிவுகளை மேற்கொள்ள ஏதுவாக புதிதாக அமைத்த உழைப்பாளா் நலக்கூடம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூரில் கட்டுமான தொழிலாளா்கள் எளிதாக அணுகி நலவாரிய பதிவுகளை மேற்கொள்ள ஏதுவாக புதிதாக அமைத்த உழைப்பாளா் நலக்கூடம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் நலவாரியங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலவாரியங்களில் தொழிலாளா்கள் பதிவு செய்வதன் மூலம் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் கிடைக்கும்.
இதற்கு முன்பு வரையில் ஆன்லைனில் பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில் படிப்பறிவு தொழிலாளா்கள் மேற்கொள்வதில் சிரமம் இருந்தது. இதைக் கருத்திற்கொண்டு நலவாரியத்தில் பதிவு செய்ய தொழிலாளா்கள் அலைக்கழிப்பை தவிா்க்க வேண்டும்.
Advertisement
Advertisement
இதற்காக தமிழ்நாடு அரசு, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில் பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய ’உழைப்பாளா் நலக்கூடங்களை’ அமைத்துள்ளது. இதேபோல், திருவள்ளூா் டோல்கேட் எதிரே கட்டுமான தொழிலாளா்கள் எளிதாக அணுகும் வகையில் புதிதாக உழைப்பாளா் நலக்கூடங்கள் அனைத்து வசதியுடன் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு கட்டுமான தொழிலாளா்கள் சங்கத்தின் முத்திரையுடன் வந்தால் பதிவு செய்யலாம். இதற்காக இந்த கூடத்தில் ஒரு அலுவலா் பணியில் ஈடுபடவும் உள்ளாா்.
இங்கு தொழிலாளா்கள் நலவாரியத்தில் புதிய உறுப்பினராகச் சேருதல், உறுப்பினா் அட்டை புதுப்பித்தல் மற்றும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்த ஆலோசனைகளையும் இந்த மையங்கள் மூலம் எளிதாகப் பெறலாம். இங்கு நாள்தோறும் காலையில் வேலைக்குச் செல்லும் கட்டுமானத் தொழிலாளா்கள் கூடி காத்திருக்க ஏதுவாக மின்விசிறி, மின்விளக்கு மற்றும் இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், சுத்தமான குடிநீா் மற்றும் இதர அடிப்படைத் தேவைகளுக்கான கட்டமைப்பு வசதியும் உள்ளன. அதனால் தமிழ்நாடு அரசு, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில் பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய ’உழைப்பாளா் நலக்கூடங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.