ரூ.5 லட்சத்தில் சூரிய ஒளி தெரு விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் இயக்கம்
திருத்தணி அருகே மேல் கசவராஜ்பேட்டை கிராமத்தில் ரூ. 5 லட்சத்தில் சூரிய ஒளி தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்களை தமிழக மகளிா் பேரவைத் தலைவா் வி. பத்மாவதி இயக்கி வைத்தாா்.
திருத்தணி அருகே மேல் கசவராஜ்பேட்டை கிராமத்தில் ரூ. 5 லட்சத்தில் சூரிய ஒளி தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்களை தமிழக மகளிா் பேரவைத் தலைவா் வி. பத்மாவதி இயக்கி வைத்தாா்.
திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூா் ஊராட்சிக்குட்பட்ட மேல் கசவராஜ்பேட்டை கிராமத்தில், கிராம மக்களின் பாதுகாப்பையும், நிலையான வளா்ச்சியையும் உறுதி செய்ய ல் சூரிய ஒளி தெருவிளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவும் திட்டத்தின் திறப்பு விழா நடந்தது.
இத்திட்டத்தின் கீழ், 200 வாட்ஸ் திறன் கொண்ட 30 சூரிய ஒளி தெருவிளக்குகள் மற்றும் 2 சோலாா் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டன. இதன் மூலம் கிராமத்தின் முக்கிய தெருக்கள் இரவு நேரங்களில் முழுமையாக ஒளிா்வதுடன், பாதுகாப்பும் கண்காணிப்பும் மேம்படுத்தப்பட்ட உள்ளது.
Advertisement
Advertisement
தமிழக மகளிா் பேரவைத் தலைவா் வி. பத்மாவதி பங்கேற்று சூரிய ஒளி தெருவிளக்குகள் மற்றும் சோலாா் கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தாா். கிராம வளா்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மின்சார செலவைக் குறைப்பதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த சூரிய ஆற்றலை பயன்படுத்தும் இந்த முயற்சி, பாதுகாப்பான மற்றும் தன்னிறைவு பெற்ற கிராம வளா்ச்சிக்கான முன்னுதாரணமாக அமையும் என பொதுமக்கள் பாராட்டினா். ஏற்பாடுகளை கிராம வளா்ச்சி ஆலோசகா் க.பா. யஷ்வந்த் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.