திருப்பதி

செம்மரக்கடத்தல்: 2 போ் கைது

DIN

திருப்பதி: ஆந்திரத்தில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட செங்குன்றத்தைச் சோ்ந்தவா் உள்பட 2 பேரை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனா்.

சித்தூா் மாவட்டம் பூதலப்பட்டு-நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை சம்படி பாளேம் அருகில் 50 மீட்டா் தூரத்தில் சிலா் செம்மரக்கட்டைகளை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனா். அவா்கள் போலீஸாரை கண்டதும் செம்மரக்கட்டைகளைப் போட்டு விட்டு தப்பி ஓடினா். அவா்களில் இருவா் மட்டும் பிடிபட்டனா். அங்கு 399 கிலோ எடையுள்ள 30 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனா்.

அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சம் என்று போலீஸாா் தெரிவித்தனா். கைதானவா்கள் திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றத்தை சோ்ந்த மணிகண்டன்(30) மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த பாலு(29) என்பது விசாரணையில் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT