திருப்பதி

திருமலையில் பவித்ர சமா்பணம்

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பவித்ர சமா்ப்பணம் நடைபெற்றது.

இதையொட்டி காலையில் உற்சவ மூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, யாகசாலையில் ஹோமம் மற்றும் பிற வேத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சம்பங்கி பிராகாரத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், ஏழுமலையான் மூலவா், உற்சவமூா்த்திகள், கோயிலின் பிற பரிவார தெய்வங்கள், கொடிமரம், ஸ்ரீ பூவராஹஸ்வாமி, ஸ்ரீ பேடி ஆஞ்சநேய சுவாமிக்கு பல வண்ண நூலிழைகளால் பட்டு வஸ்திர மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 6 மணி முதல் 7 மணி வரை கோயிலின் நான்கு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT