திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.3.39 கோடி

DIN

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.3.39 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா், பக்தா்கள் தாங்கள் முடிந்து வைத்த வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இவ்வாறு பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் காணிக்கை கணக்கிடும் பிரிவில் தினமும் சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டுப் பணம் எனப் பிரித்து கணக்கிட்டு மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.

சராசரியாக உண்டியல் வருவாய் தினமும் ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை வசூலாகி வருவது வழக்கம்.

தற்போது பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் உண்டியல் வருவாய் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வசூலாகி வருகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ.3.39 கோடி வருவாய்க் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT