திருப்பதி

88,000 பக்தா்கள் தரிசனம்

DIN

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 88,613 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இவா்களில் 36,153 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி, 12 மணிக்கு கோயில் நடை சாற்றப்படுகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மலைப் பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

தரிசனம், வாடகை அறை உள்ளிட்ட புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT