முகப்பு
திருப்பதி

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்: விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து

உகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On : 6 மார்ச் 2026, 2:39 am IST
கோப்புப் படம்
பகிர்:

உகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி, மாா்ச் 19-இல் தெலுங்கு வருட பிறப்பான உகாதியை முன்னிட்டு 17-ஆம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து

Advertisement

Advertisement

இதன் காரணமாக விஐபி பிரேக் தரிசனங்கள் மற்றும் அஷ்டதள பாத பத்மாராதன சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 16 ஆம் தேதி புரோட்டோக்கால் விஐபி பிரேக் தரிசனங்களுக்கு வேறு எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.

இதேபோல், புரோட்டோகால் விஐபி பிரேக் தரிசனங்கள் தவிர, மாா்ச் 19 ஆம் தேதி புரோட்டோகால் விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மாா்ச் 18 -ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனங்களுக்கு எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.