திருவண்ணாமலை

கல்லூரியில் ஆளுமை மேம்பாடு பயிலரங்கம்

DIN

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், செய்யாறு ரிவர்சிட்டி லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய ஆளுமை மேம்பாடு குறித்த ஒரு நாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்காக நடைபெற்ற இந்த பயிலரங்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) ஆ.மூர்த்தி தலைமை வகித்தார்.
சிறப்பாளராக தூசி பாலிடெக்னிக் கல்லூரிப் பேராசிரியரும், லயன்ஸ் சங்க இயக்குநருமான எஸ்.அருண் கலந்து கொண்டு பேசியதாவது:
ஆறறிவு கொண்ட மனிதன் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்னைகளை எதிர்கொண்டாலும் அதற்கான தீர்வைக் காண்கிறான். தீர்வு காண்பதற்கு மனிதனின் ஆறாம் அறிவு பயன்படுகிறது. படிக்கும் பருவத்தில் இருக்கும் மாணாக்கர்களாகிய உங்களுக்கு தடைக்கற்கள் எவ்வளவோ உருவாகும். அந்தத் தடைகற்கள் உங்களின் வெற்றி இலக்கை அடைவதற்கு தடைகளாகவே இருக்கும்.
 அதனை உங்களின் அறிவாற்றலால் படிக்கற்களாக  மாற்றி வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க மாவட்ட நிர்வாகிகள் பி.நடராஜன், கே.செல்வகுமார்,  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் டாக்டர் இ.மாரிமுத்து, மு.குமார், பேராசிரியர்கள் ஜி.மணி, எஸ்.துரைராஜ், சிடி.ரவிச்சந்திரன், என்சிசி அலுவலர் சுப்பிரமணி, நூலகர் மணி  மற்றும்  கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT