திருவண்ணாமலை

புதை சாக்கடை இணைப்பு பெறாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்: பொதுமக்களுக்கு நகராட்சி எச்சரிக்கை

DIN

திருவண்ணாமலை நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டம் நடைமுறையில் உள்ள வார்டுகளில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் உடனடியாக புதை சாக்கடை இணைப்பு பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் எஸ்.பாரிஜாதம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் புதை சாக்கடைத் திட்டம் நடைமுறையில் உள்ள வார்டுகளில் வசிப்பவர்கள் தங்களது குடிநீர் இணைப்புடன் புதை சாக்கடை இணைப்புகளை உரிய கட்டணம் செலுத்தி 15 நாள்களுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி துண்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT