திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயில் இணை ஆணையர் பொறுப்பேற்பு

DIN

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் இணை ஆணையராக ஆர்.ஜெகன்னாதன், வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தக் கோயில் இணை ஆணையராக இருந்தவர் எஸ்.ஹரிப்பிரியா. இவர், பதவியேற்ற நாளில் இருந்து அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில், எஸ்.ஹரிப்பிரியா, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தின் இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை இந்து அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராகப் பணியாற்றி வந்த ஆர்.ஜெகன்னாதன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, வியாழக்கிழமை ஆர்.ஜெகன்னாதன் அருணாசலேஸ்வரர் கோயில் இணை ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர், கோயிலின் அனைத்துப் பிரகாரங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, அலுவலக ஊழியர்கள் புதிய இணை ஆணையருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் மூழ்கி மீனவா் மாயம்

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆட்டோ ஓட்டுநா் கொலை: தந்தை, மகன்கள் கைது

SCROLL FOR NEXT